மகளிர் தினம்
சின்னஞ் சிறிய கோட்டைக்குள்
அழகான அரச மகாராணியே!
காலை முதல் மாலை வரை
காரிருள் நீக்கும் பகலவனே!
கைப் பிடித்த கணவனுக்கு
நல்ஆலோசனை கூறும் அமைச்சரே!
ஈன்றெடுத்த தன் பிள்ளைகளுக்கு
அறிவுரை கூறும் ஆலோசகரே!
காலச் சக்கரம் தன்பிடியில்
சுற்றி வரும் தேரோட்டமே!
பொறுமைக் காத்து வழிநடத்தி
மண்ணில் வலம்வரும் பூமித்தாயே!
நீவீர் வாழ்க பல்லாண்டு!
என் இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக