குடியரசு தினம்
அந்நிய படை யெடுப்பில்பயந்து ஓடவில்லை!
ஆங்கிலேய ஆட்சிக் கண்டு
ஓய்ந்து விடவில்லை!
சாதி மதம் பேதமென்று
சாதிக்காமல் இருந்ததில்லை!
கயவர்களைக் கண்டு யாரும்
பயந்தவர்கள் இங்கில்லை!
காந்திபாரதி போன்ற தலைவரெல்லாம்
உயிர்கொடுக்க தயங்கவில்லை!
தியாகம் கொண்ட தூய
உள்ளங்கள் மாறவில்லை!
தீச்சுடராய் போராடும் கடும்
போராளிகள் மறையவில்லை!
உயிர்க் கொடுத்தத் தியாகிகள்
புகழ் மங்கவில்லை!
ஊனமுற்ற அன்பு நெஞ்சங்கள்
என்றும் பின்வாங்கவில்லை!
உலகை விட்டுச் சென்ற
வீரர்புகழ் மறையவில்லை!
சுதந்திர வீரர்கள் புகழ்
போற்றுவோம்! போற்றுவோம்!
குடியரசு தின வாழ்த்து
அனைவருக்கும் கூறுவோம்!
வாழ்க இந்தியநாடு!
வளர்க நம்இந்தியதேசம்!
கருத்துகள்
கருத்துரையிடுக